கதை

கண்ணகி

கண்ணகி பெண்மைக்கே உண்டான அச்சம், அறிவு, தைரியம், பக்தி என அனைத்து அம்சங்களும் பொருந்திய கண்ணகி தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்போது எப்படி அல்லலுற்றாள், திசைமாறிய கணவன் மனம் திருந்தி வரும்போது எவ்வாறு அவனை ஏற்றுக்கொள்கிறாள், தவறான தீர்ப்பால் தன் கணவன் கொல்லப்பட்ட போது நாடாளும் மன்னனையே எவ்வாறு எதிர்கொண்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபிக்கிறாள், தவறான தீர்ப்பை வழங்கிய மன்னனுக்கு என்ன தண்டனை வழங்குகிறாள் என்று படிப்போர் மனம் உருக படைத்திருப்பார் இளங்கோவடிகள். மாட்சிமை பொருந்திய ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கண்ணகி பாத்திரம் வழியே மிக அழகாக எடுத்துரைத்திருப்பார். இத்தகைய சிறப்புகளால்தான் கண்ணகி இன்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

Comment here