கதை

கன்னிகை விவாஹத்திற்கு யோக்கியமானவளாகி விட்டாள்

 

ஒரு பிராம்மணரிருந்தார்.

அவர் நித்தியப் பிரதி பாகவதத்தைப் பாடம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு ஒரு கன்னிகை விவாஹத்திற்கு யோக்கியமானவளாகி விட்டாள்.பிராம்மணருடைய வீட்டுக்காரி சொன்னாள், ‘மகளுக்கு விவாஹம் செய்ய வேண்டி, ஏதாவது கொஞ்சம் தனம் கொண்டு வாருங்கள்.’

பிராம்மணர் சொன்னார், ‘நாளதுதேதி வரையில், நான் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை; எனக்கு கேட்கவும் வராது.’

எப்படியாகும் விவாஹம்?

பிராம்மணருடைய மனைவி கெட்டிக்காரியாக இருந்தாள்.

அவள் சொன்னாள், ‘நான் ஒரு வேலை சொல்கிறேன்; அதை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள். தனம் கிடைத்து விடும்!’

‘என்னது?’

மனைவி ஒரு கம்பைக் கொண்டு வந்தாள். அதை அவள் கணவரிடம் கொடுத்தாள். ‘இதை எடுத்துக் கொள்ளுங்கள்.’

‘என்ன செய்வேன் இதை?’

‘நீங்கள் ராஜாவின் அரண்மனைக்குப் போங்கள். துவாரபாலகர்கள் உங்களை தடுப்பார்கள்.

நீங்கள் சொல்லுங்கள் – நான் ராஜாவுடைய சகலை! ராஜா உங்களை உள்ளே கூப்பிட்டுக் கொள்வார்.

ராஜசபைக்குள்ளே நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கம்பை ஒரு தடவை மேலே உயர்த்துங்கள்; ஒரு தடவை கீழே! பிறகு, இதை மூன்று சுற்று, தலையை சுற்றி, சுற்றி விட்டு எழுந்து நின்று விடுங்கள். உங்களுக்கு தனம் கிடைத்து விடும்.’

பிராம்மணர் சொன்னார், ‘நல்லது. புறப்படுகிறேன்.’

அவர் நேராக அரண்மனைக்குப் போனதும், துவாரபாலகர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள். ‘ஏய், எங்கே போகிறாய்?’

பிராம்மணர் சொன்னார், ‘நான் ராஜாவுடைய சகலை! எனக்குப் பார்க்க வேண்டும் அவரை.’

துவாரபாலகர்கள் அவரை மேலிருந்து கீழே – கீழிருந்து மேலே – பார்த்தார்கள். ‘நீயாவது, சகலையாவது! (சகலை என்று யாரைச் சொல்கிறோம்? தன்னுடைய மனைவிக்கு ஒரு சஹோதரி இருந்தாளென்றால், அவருடைய கணவரை சகலை என்கிறோம்.) இவர் சகலை மாதிரி தெரியவில்லை. இருந்தாலும், நமக்கு ஏன் பொல்லாப்பு?

அவர்கள் போய் ராஜாவுக்கு சேதி சொல்லி விட்டார்கள், ‘ராஜா, உங்களுடைய சகலை வந்திருக்கிறார்.’

ராஜா யோசித்தார், ‘என்னுடைய மனைவியோ அவளுடைய தாய்-தந்தையருக்கு ஒரே மகள்!

அப்படியென்றால், இந்த சகலை எங்கிருந்து முளைத்து விட்டார்? அதனாலென்ன, பரவாயில்லை. கூப்பிடுங்கள், பார்த்து விடலாம்!’

பிராம்மணர் வந்தார்.

எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘பார், ராஜாவுடைய சகலை! பார், ராஜாவுடைய சகலை!’

ராஜாவோ புத்திசாலியாக இருந்தார். அவர் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிராம்மணர் வந்தார்.

அவர் கம்பை ஒரு தடவை மேலே உயர்த்தினார்;

ஒரு தடவை கீழே தாழ்த்தினார்.

தன்னுடைய தலையை கம்பால் மூன்று சுற்றுகள் சுற்றி, எழுந்து நின்று விட்டார்.

ராஜா கைதட்டினார். ‘யாரங்கே?’

மந்திரி கைகூப்பி நின்றார். ‘சொல்லுங்கள் மஹாராஜா!’

‘ஐந்நூறு ரூபாய்களை பணமுடிப்பாகக் கொண்டு வாருங்கள்!’

அந்த காலத்தில் ஒன்று-ஒண்ணரை ரூபாயே அதிகம்!

ராஜா பிராம்மணருக்குக் கொடுத்து விட்டார். ‘இதைப் பிடியுங்கள்.’

பிராம்மணர் பணமுடிப்பை பத்திரப்படுத்திக் கொண்டு, கீழே கிடந்த புழுதியை திரட்டி எடுத்து, வாரி இறைத்து விட்டு, போய் விட்டார்.
(ச.க.ம.16.9.18.🙏🙏)
சபையினர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜாவும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

ராஜசபையில் ராஜாவிடம் வினவப்பட்டது, ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?’

ராஜா சொன்னார், ‘முதலில் நீங்கள் சொல்லுங்கள் – நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?’

மந்திரி, சேனாதிபதி – எல்லோரும் சொன்னார்கள்,

‘எங்களுக்கு இதை நினைத்துத் தான் சிரிப்பு வந்து விட்டது மஹாராஜா – பாருங்கள், பிராம்மணர் வந்து உங்களை முட்டாளாக்கி விட்டு விட்டார்.

பணத்தையும் கொண்டு போய் விட்டார்; புழுதியையும் வாரி இறைத்து விட்டுப் போய் விட்டார். அதனால் தான் சிரிப்பு வந்து விட்டது.

ஆனால் மஹாராஜா, நீங்கள் ஏன் சிரித்தீர்கள்?’

ராஜா சொன்னார், ‘உங்களுடைய முட்டாள்தன த்தைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது.’

‘எப்படி?’

‘கேளுங்கள்- பிராம்மணர் வந்து என்ன சொன்னார்

– நான் உங்களுடைய சகலை! என்னுடைய மனைவிக்கோ சஹோதரி யாருமில்லை.

பிறகு, எனக்கு ஞாபகம் வந்தது – சமுத்திரமந்தனம் செய்த போது, அதிலிருந்து லக்ஷ்மி வந்தாள். நானோ லக்ஷ்மிவான்! என்னிடம் லக்ஷ்மி இருக்கிறாள்! மேலும், பிராம்மணரோ தரித்திரத்திலிருப்பவர்! நாங்கள் சகலையாகி விட்டோம்!’

‘அப்படியா! கம்பை மேலும், கீழும் தூக்கியதற்கு அர்த்தம்?’
(பகிர்வு. ச.க.ம.16.9.18.🙏🙏)
ராஜா சொன்னார், ‘அவர் சொல்ல வந்ததன் நோக்கம் இதுவாகத் தானிருந்தது – மேலே ஆகாயம்; கீழே பூமி! அதாவது என்னிடம் வேறொன்றுமில்லை!

மூன்று தடவை சுற்றியதற்கு அர்த்தம் – என்னுடைய கன்னிகைக்கு பிரதக்ஷிணம் செய்விக்க வேண்டும் – கல்யாணம் செய்ய வேண்டும். கையில் ஒன்றுமேயில்லை.

நான் யோசித்தேன் – என்னுடைய சகலை வந்திருக்கிறார்! நான் அவருக்கு ஒன்றும் தரவில்லை என்றால், என்னுடைய லக்ஷ்மி கோபித்துக் கொண்டு விடுவாள்.

அதனால், நான் கன்யாதானத்திற்காக வேண்டி பணத்தைக் கொடுத்து விட்டேன்.’

‘மஹாராஜா, எல்லாம் சரி! போகும் போது, புழுதியை வாரி ஏன் இறைத்து விட்டுப் போனார்?’

‘அது இதனால் தான் – பிராம்மணர் அப்படி செய்ததன் நோக்கம் இதுவாகத் தானிருந்தது –
(பதிவு.ச.கணேசன். மதுரை. 16.9.18.🙏🙏)
இந்த தனத்தை நான் கன்யாதானத்திற்காக வேண்டி, எடுத்துக் கொண்டு போகிறேன்;

நல்ல காரியத்திற்காக எடுத்துக் கொண்டு போகிறேன்.

நான் போன பிறகு, யாராவது இதை பரிகாசம் செய்தார்கள் என்றால் அவர்கள் தலையில் புழுதி!’

(சமுத்திரமந்தனத்தில் வெளிவந்த தரித்திரதேவதை ஸ்ரீஹரியின் தூண்டுதலால் பிராம்மணரை கணவராக வரித்து விட்டாள். மூத்தவளிருக்கும் போது இளையவள் லக்ஷ்மிக்கு கல்யாணம் நடக்க முடியாதே!)
நட்புடன்! !!!!!!!!

Comment here