சினிமா

கபாலி பட டிக்கெட்கேட்டு செய்தி, விளம்பரத்துறை அதிகாரி கடிதம்

நாளை வெளியாக உள்ள கபாலி திரைபடத்தின் முதல் காட்சிக்கு 10 டிக்கெட்டுகள் கேட்டு சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு தமிழக அரசின் செய்தி விளமபரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையை சேர்ந்த தலைமை தனி உதவியாளர் ,தனது லெட்டர் பேடில், கடந்த 15-ம் தேதி , சென்னை அபிராமி திரையரங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் , கபாலி திரைப்படத்தின் முதல் காட்சிக்கு 10 டிக்கெட்டுகள் கொடுத்து அனுப்பும்படி குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதம் வெளியாகியுள்ளது.

Comment here