Sliderகல்வி

கம்போடியாவின் – அழகிய பெண்களும்,

கம்போடியாவின் காட்சிகள் # 1296 – 1297.

இன்னம் கொஞ்சம் தகவல்கள் செய்யூ தா குவான் எனும் சீனப்பயணியின் குறிப்பில் இருக்கிறது .அதையும் இப்போதே சொல்லிவிடுவது உசிதம்
அந்த சீனப்பயணி கண்டமன்னரின் நகர்வலத்தில் இடம் பெற்ற மன்னன்
மூன்றாவது இந்திரவர்மன் ஆகும்

மேலும் அந்த சீனப்பயணி கண்டதாகக்குறிப்பிடும் அன்றைய கம்போடியாவில்
ஆண்களும் பெண்களும் மேலாடை அணிவதில்லை . இடையில் மட்டுமே சிறிய த்துணி இடம் பெறும் அநேகமாக காலணி அணியும் வழக்கம் அங்கு இல்லை .
வெறும் காலுடனேயே நடந்திருக்கிறார்கள் .
சாதாரணமாக பெண்கள் தலையில் முடிக்கு அணிகலன் அணிவதில்லை , உயர்குடி மகளிர் மட்டும் தலைக்கு தங்க அ ணிகள் அணியும் வழக்கம் கொண்டிருந்தனர் .
கம்போடியாவின் அனைத்து அழகிய பெண்களும் அரண்மனை வேலைக்கு
அனுப்பப்படுவது வழக்கமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் .

வணிகம் மகளீரிடம் மட்டுமே இருந்தது .
வணிக சந்தைக்கு என்று தனியாகக் கட்டிடங்கள் இல்லை .
திறந்த வெளியில் பெரிய பாய்களை பரப்பி அதில் தங்கள் வணிகப்பொருள்களை குவித்ததுபெண்கள் வணிகம் செய்திருக்கின்றனர் .
அந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் வாடகை வசூலித்திருக்கிறார்கள்
அந்த பெண்கள் எந்தவகையான பொருள்கள் விற்றார்கள் என்ற விபரம்பயணக்குறிப்பில் இல்லை .

ஆயினும்தமிழ் நாட்டு மீனவர் பெண்கள் இன்னமும் அவர்களது ஆண்கள் கொண்டுவரும் சந்தைப்பொருள்களை வணிகம் செய்யும் பொறுப்பை வகிக்கின்றனர் .
அவர்களின் விலை சொல்லும் விதமும் பேரம் பேசும் ஆற்றலும் ,
எந்த வித மேலாண்மை பள்ளியும் தராத அனுபவ அறிவாகும் .பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திறன்அது ஆகும் மீனவ ஆண்கள் வீரமும் தைரியமும் கொண்டவர்கள் , தடைகள் பல வந்தாலும் , மீண்டு செல்லும் ஆற்றல் கொண்டவர்கள் . மீனவப்பெண்கள் அதிகம் வியாபார நெளிவு சுளுவு கற்றவர்கள் .
இவை ஆயிரம் ஆயிரம் ஆண்டு தொடர் பயன்பாட்டால் வந்தது .

அந்த சீனப்பயணி கம்போடியா வீடுகளில் எந்த வித மேஜை , நாற்காலிகளை கண்டதில்லை என்கிறார் .
அவர்கள் மண் பானைகளில் உணவை சமைத்ததாகக்கூறுகிறார் .
அதற்கான கரண்டிகள் எனும் அகப்பை தேங்காய் ஓடுகளால்ஆகினா நீண்ட குச்சியால் ஆனது . தமிழ் நாட்டில் இன்னமும் அத்தகைய அகப்பைகள் புழக்கத்தில் உள்ளது .

பெரிய , குவளைகளும் வாளிகளையும் அவர்கள் வீட்டில் கண்டதில்லை எனக்கூறுகிறார் .அவர்கள் தயாரித்த குழம்பு ரசம் போன்றவை
தொன்னை எனப்படும் இலைகளை பிணைத்து செய்யப்படும் கிண்ணங்களில்
பயப்படுத்தியதாகக்கூறுகிறார் .
அத்தகைய தொன்னைகள் இன்னமும் தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது .

சீனப்பயணி செய்யூ தா குவான் கண்ட அங்கோர் நகரத்தை விரிவாக வர்ணிக்கிறார் .
அது ஒரு பெரியக்கோட்டைக்குள் அமைந்திருந்தது .
அந்தக்கோட்டைக்கு ஐந்து வாசல்கள் இருந்தன ,
நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் ,
ஐந்தாவது வாசல் கிழக்கிலே இருந்தது .
கிழக்கில் இரு வாசல்கள் இருந்தன
.ஐந்திலும் புத்தரின் தலை பொறிக்கப்பட்டிருந்தது .
கோட்டையை சுற்றி அகழியும் அதில் பாலகளும் உண்டு .
ஒன்பது தலை நாகத்தின் பெரிய உருவம் அதில் இடம் பெற்றிருந்தது .

ஐந்து புத்தரின் தலையில் நான்கு திசைக்கு நான்கும் மற்ற கிழக்கில் இருந்த சிலை தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது .

நகரம் சதுரமாக அமைந்திருந்தது .
நகர வாசல்கள் நன்கு போர்வீரர்களைக்கொண்டு பாதுகாக்கப்பட்டது .
பகலில் மட்டுமே கோட்டைக்குள் செல்ல முடியும் ,
இரவில் கோட்டை வாசல்கள் மூடப்படும் .
நாய்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

இதில் தவறு என நான் முன்பு குறிப்பிட்டது அந்த சீனப்பயணி கண்ட,
பிற மதத்தவரை சீனாவின் கன்பியூசியஸ் , தாவோ என்று அவர் நினைத்தபடிக் குறிப்பிட்டுவிட்டார் . அவர்கள் தமிழர்களாக இருந்திருக்கலாம் .எனக்கூறப்படுகிறது

என்ன இருந்தாலும் சீனப்பயணி செய்யூ தா குவான் கண்ட பயணக்குறிப்பு , கம்போடியாவைப்பற்றி கூறும் ஒரு வரலாற்றுப்பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here