Sliderஉலகம்

கம்போடியாவின் வணிகம்- பெண்களால் நிர்வகிக்கப்பட்டதா ?

கம்போடியாவின் காட்சிகள் # 1296 – 1297

தமிழ் வரலாற்றைத் தெரிந்து கொள்ள பாஹியான் ஹுவாங் சுவாங்
போன்ற சீன யாத்த்ரிகர்களின் பயணக்குறிப்புகள் உதவுவது போல கம்போடியாவின் வரலாற்றை அறிய செய்யூ தா குவான் எனும் சீன யாத்த்ரிகரின் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கிறது .

The Customs of Cambodia by Zhou Daguan என்பது அந்தக்குறிப்பின் பெயர் .

செய்யூ தா குவான்எனும் சீன அரசின் அலுவவலர் கம்போடியாவில் 1296 – 1297
வரை பயணம் செய்தார் . அவர் சீன அரசு அலுவலர் ஆனதால் அவர் கம்போடியாவின் அரசகுலம் ,அரண்மனை , அப்போதையஅந்த நாட்டு மக்கள் இவர்களிடம் இணக்கமாக இருந்திருக்கிறார் .
அப்போது அவர்கண்ட தகவல்களை நேர்முக வர்ணனையாகத் தொகுத்திருக்கிறார் .இது ஒன்றே கிடைத்திருக்கும் அத்தகைய நேரடிக்குறிப்பு .ஆகும் .ஆதலால் அதிக வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக உள்ளது .

இதில் இருவேறு பதிப்புகள் இருவேறு அரச வம்சத்தில் கிடைத்த போதும், முதல் மொழி பெயர்ப்பு பிரெஞ்சு மொழியில் 1819 வெளிவந்தது .அதன் பிரெஞ்சு பெயர்
Mémoires sur les coutumes du Cambodge– de- Tcheou Ta-Kouanஆகும் .
அதற்குப் பிறகு பல்வேறு பல மொழியிலும் வெளிவந்தன .ஆனால் முதல் திருத்திய மொழிபெயர்ப்பு நேரடியாக சீனத்தில் இருந்து நவீன ஆங்கிலத்திற்கு
2007,இல் Sino-linguist Peter Harris, a Senior Fellow at the Center for Strategic Studies New Zealand, வெளிவந்தது .
இனி அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய செய்திகளைக்காணலாம்

1) இது கம்போடியாவின் தலை நகரான யசோதரப்புராஅங்கோர் வாட் பற்றி முழுமையான விவரிப்பைத்தருகிறது .
அதன் தினசரி நடவடிக்கைகள் , அரண்மனைப்பழக்க வழக்கங்கள் , மத நடவடிக்கைகள் அத்தனையும் விவரிக்கிறது .
பெண்களின் பங்களிப்பு , அடிமைகளின் நிலை ,வணிகம் ,நகர வாழ்க்கை , விவசாயம் அங்கு வசித்த சீனர்கள் பிற அயல் நாட்டவரின் நிலை , மற்றும் அதன் வளத்தையும் ,செழுமையையும் விவரிக்கிறது .
அதில் சில தவறுகள் ,இப்போது காணப்பட்டாலும் இது ஒன்றே நேரடியாகக் கண்டவரலாற்றுக்குறிப்பு ஆகும் .இதுவே முழுமையாகக்கருதப்படுகிறது .
2) அரண்மனைகள்

—–அரண்மை மற்றும் அணைத்து அரசங்கக்கட்டிடங்கள் முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியேக் கட்டப்பட்டிருந்தது .

——- அரசனின் அரண்மனை நகரத்தின் வடக்குப்பகுதியில் இருந்தது
—- அரண்மனையை இணைக்க தங்கத்தால் பாலம் விடப்பட்டிருந்தது .
——-அரண்மனை சுமார் 1.5 மையில் சுற்றளவு கொண்டது

———அரண்மனையில் வசிக்கும் உட்புறம் ஈயத்தால் ஆனது மாற்றப்பகுதிகள்
மஞ்சை வண்ணம் கொண்ட சுட்ட மண்ணால்ஓடுகளால் செய்யப்பட்டது .
—–எங்கும் புத்தரின் வண்ண ஓவியங்களும் , சிலைகளும் நிரம்பியது .
—— கூரைகளும் வண்ணமயமானவை
—–அரண்மனை சுற்றிய தாழ்வாரம் திறந்தது , சிறந்தது , அஸ்கரிக்கப்பட்டது

3 ) வாழ்விடங்கள்

வாழ்விடங்கள் வாழ்பவர்களின் தரத்திற்கும் , தகுதிக்கும் கொண்டு மாறுபட்டிருந்தது .
அரசப்பிரதிநிதிகளும் , அரசு அலுவலர்களும் வாழும் வீடுகள் பொதுமக்களின்
வீடுகளில் இருந்து மாறுபட்டவை . குடிமக்கள் கீற்று வேய்ந்த வீடுகளில் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்பட்டனர் .
— வசிக்கும் வீடுகள் அவர்களின் அந்தஸ்தை குறிக்கும் அளவு கோலாக இருந்தது .
—மன்னர்களும் , அரச குலத்தவர்கள் , மந்திரிகள் மட்டுமே ஓடுபோட்ட வீடுகளில் வசிக்க இயலும் .

4) அரசரின் நகர் வலம்

மன்னர் எப்போதாவது நகர் வல்ம் போகும் பொது அது ஒரு உற்சவமாகவே இருந்தது .அந்த ஊர்வலத்தில் முதலில் போர்ப்படை அணிவகுப்பு பாதுகாப்பிற்க்காக செல்லும் .
அடுத்ததாக கொடிகளும் , பதாகைகளை வாத்தியயமும் இசைக்க அணிவகுக்கும்
— அடுத்து அரண்மனைப்பெண்டிர் அணிவகுப்பு !அது 300- 500 பேர்கள் கொண்டதாக இருக்கும் .அவர்கள் முழுவதும் மலர்களால் அலங்கரித்து அழகுடன் விளங்குவர் .
–அவர்கள் கையில் ஏற்றிய தீப்பந்தங்கள் ஒளிரும் ,
–அது பகலாக இருந்தாலும் தீப்பந்த அணிவகுப்பு உண்டு ,
— பிறகு அரண்மனை , அரசிகள் இளவரசிகள் , அரசகுல பெண்கள் அணிவகுப்பு !
அவர்கள் உடல் முழுவதும் பொன் ஆபரணம் மின்ன வல் ம் வருவர் .
— அவர்களுக்கு பின் அரண்மனை பெண் பாதுகாவலர் , வாள் ஈட்டித்தாங்கி – ஏந்தி வருவார்
— அடுத்து முழுவதும் தங்கத்தால் செய்யப்பட ரதத்தில் , குதிரைகள் இழுக்க
மன்னர் கம்பீரமாக வாளேந்தி வருவார் .
— அவருக்கு மேலே கொற்றக்குடைகள் சூழ வருவார் .

— அவருக்கு அடுத்ததாக இளவரசர்களும் , அமைச்சர்களும் யானையிலும் , குதிரையில் வருவார்கள் .
—- அதற்க்கு அடுத்தபடியாக சிவிகையில் , யானை அம்பாரியில் , வண்டிகளில் மன்னரின் நூற்றுக்கு மேற்பட்ட மனைவிகளும் , காதல் கிழத்திகளும் வருவார்கள் அவர்களின் உடல் ,மற்றும் யானையின் அம்பாரி அத்தனையும் தங்கத்தால் தகதகக்கும் இத்தனையும் செய்யூ தா குவான் கூறியதுதான் . நான் கொஞ்சம் சுருக்கி வேறு விட்டேன் .!

— மன்னர் மட்டுமே உடலிலும் ,இடையிலும் முழுமையாக ஆடை உடுத்த உரிமைப் பெற்றவர் . அவரது உடலில் குறைந்தது மூன்று பவுண்டு முத்து மாலை இடம்பெறும் , கைகள் , விரல்கள் , கழுத்து முழங்கை அத்தனையும் பொன் ஆபரணங்களால் நிறைந்திருக்கும் .
தங்கத்தின் மகத்துவத்தை மன்னர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர் போலும் .

5) பெண்களின் நிலை

கம்போடியாவின் வணிகம் முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட்டதாக சீனப்பயணிக்கூறுகிறார்
இது சற்று சிறப்பான செய்திக்காகவே தெரிகிறது .
பெண்களுக்கு இருந்த சுதந்திரம் , செல்வ நிலை சிந்திக்கவைக்கிறது .
11 ஆம் நூற்றாண்டில் பெண்கள் நிலை ஆசியாவில் அத்தனை மேன்மையாக இருந்திருக்கிறது .
சீனர்கள் இந்த நாட்டிற்கு வந்த உடன் முதலில் அவர்களை பெண்களிடத்தில் அழைத்துச் சென்று , அவர்களின் வணிக மேன்மையை தெரியச் செய்வார்கள் என்று அந்த பயணிக் கூறுகிறார் .
இன்னமும் நிறைய விஷயங்களைக்கூறுகிறார் அவைகளை அடுத்தப்பகுதியில் பார்க்கலாம் .

அண்ணாமலை சுகுமாரன்

ஆதாரம் https: //en.wikipedia. org/wiki/Zhou_ Daguan

 

Comment here