அரசியல்தமிழகம்பொதுமாவட்டம்

கருணாநிதிக்கு சிலை வைக்க அழகிரி மனு

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிலை வைக்க முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இந்திய அளவில் மூத்த அரசியல் கட்சித் தலைவராக இருந்து உயிரிழந்தவர் கருணாநிதி. இவர், அரசியலில் மட்டுமில்லாமல், சினிமா, எழுத்து, கவிதை, வசனம், இலக்கியம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு, மதுரை, கே.கே.நகர் ஆவின் சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டு கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகரிடம் முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான அழகிரி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், முதல்வராக 5 முறை இருந்தவரும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவருமான கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here