இந்தியா

கருவறைக்குள் எங்களை விடுவீர்களா?

முழுவதையும் படிக்கவும்
அந்த ஆலயத்தை கட்ட சொல்லி பொன்னும் பொருளும் கொடுத்து வழிபாட்டு மானியமும் கொடுத்த அரசன் உள்ளே செல்ல முடியாது.

அவனோ அவனின் குடும்பமோ கர்ப்பகிரகத்தினுள் நுழைய முடியாது.

அரசனின் பலம் வாய்ந்த தளபதிகளும் நுழைய முடியாது.

அதாவது அந்த சமூகம் அப்படி கட்டுபட்டு நின்றது, கடவுளுக்காக வாழ்வோர் மட்டும் உள்ளே சென்றால் போதும் மன்னனே ஆயினும் வெளியில் நிற்க என வகுத்தது.

மன்னனும் அதை ஏற்று மனமார பின்பற்றினான்….

ஆம…..
ஆலயத்தில் ஆண்டான் அடிமை பார்ப்பான் சூத்திரன் வைசிகன் எனும் பேதத்தை யாரும் கண்டதில்லை

ஆலயத்துள் நுழைய எல்லோருக்கும் அனுமதி இருந்தது, இந்த மதுரை வைக்கம் போன்ற ஆலயங்களில் இருந்த சர்ச்சை சில காலமே….

அப்பொழுதும் மற்ற ஆலயங்களில் எல்லோரும் செல்லும் அளவுதான் நிலமை இருந்தது, அங்கெல்லாம் சிக்கல் இல்லை…

ஆலயத்துள் யாரும் செல்லலாம் ஆனால் மகா முக்கியமான கர்ப்பகிரகத்தில் கடவுளுக்கு அர்ப்பணிக்கபட்டோரும் மகா நம்பிக்கைக்கு உகந்தோரும் பந்த பாசம் அறுத்தோரும் மட்டும் செல்லலாம் எனும் விதி இருந்தது…

குருக்கள் செல்வாரே அன்றி குருக்களின் மனைவியும் மக்களும் செல்லமுடியுமா?

பார்ப்பான் என்பதுதான் கர்ப்பகிரகத்தில் நுழையும் தகுதி என்றால் பிராமண பெண்களும் குழந்தைகளும் செல்லலாமே? சென்றார்களா?

இல்லை ஒரு காலமும் இல்லை….

பாதுகாப்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அன்றே ஏற்படுத்தபட்ட விஷயங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றது தூய்மையான இந்துமதம்…

கர்ப்பகிரகம் பார்ப்பனருக்கு மட்டுமான இடம் அல்ல, கடவுளுக்காக அர்ப்பணிக்கபட்ட மற்ற சாதியின வழிபாடு நடத்தும் எத்தனையோ ஆலயங்கள் இங்கு உண்டு….

கத்தோலிக்க கிறிஸ்தவ பீடங்களிலும் குருக்கள் தவிர யாரும் வழிபாடு நடத்தமுடியாது, பெண்களுக்கு பீடத்தில் வழிபாடு நடத்த அனுமதி இன்றும் இல்லை…

பீடத்தை அடுத்த அந்த நற்கருணை பெட்டியினை குருவானவர் தவிர யாரும் தொடக்கூடாது, திறக்க கூடாது…

அவர்கள் காக்கும் புனிதம் அப்படி!!

இன்றும் புனிதமான மெக்காவின் காபாவில் அரசகுடும்பம் தவிர யாரும் செல்லமுடியாதும்
எல்லோரையும் அனுமதித்தால் அந்த மகாபுண்ணிய இடத்தை பராமரிப்பது கடினம் என்கின்றது சவுதி அரச குடும்பம்…

அட வேளாங்கண்ணி கோவிலிலே மூல விக்கிரகத்தை யாரும் தொடமுடியாது….
பீடத்துக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாது, காரணம் அந்த காணகிடைக்கா சொரூபத்துக்கான பாதுகாப்பு….

இதுதான் இந்து ஆலயங்களிலும் நடக்கின்றது, அது தீண்டாமையாம்….

ஆம் தனித்துவமும் புனிதமுனான விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக தூரத்தில் வைப்பதுதான் சரி…

அனுமதிக்கபட்ட சிலரை மட்டும் வைத்து வழிபடுவதுதான் சால சிறந்தது…

அதில் மந்திர உச்சாடனை,சிலையினை உருவேற்றுதல் என சில விஷயங்கள் உண்டு என நம்புபவர்கள் நம்பட்டும்….

நம்பாதோர் அதில் இருக்கும் பாதுகாப்பு இன்னபிற விஷயங்களை நம்பினாலோ போதும்….

ஒரு மருத்துவருடன் நோயாளி கைகுலுக்கினால் அடுத்த நோயாளி வருமுன் மருத்துவர் கைகளை பலமுறை டெட்டால் போட்டு கழுவுகின்றார் மருத்துவர்….

ஏன் நோய் பரவிவிடுமாம், ஆம் கொரோனா காலத்தில் இது தெளிவாய் விளங்கும்….

எல்லோரையும் கர்ப்பகிரகத்தில் விட்டு சொரூபத்தை தொட்டு வணங்க சொன்னால், ஒவ்வொரு முறையும் சிலையின் பாதத்தை கழுவுவது நடக்கும் காரியமா?…

இதனால்தான் தள்ளி நின்று வணங்க சொன்னார்கள் அன்றைய இந்துக்கள்…

ஆலயங்களை கழுவி விடுவதும் மிக சுத்தமாக பார்த்துகொள்வதும் இந்த தத்துவமன்றி வேறல்ல‌…

அதில் சூத்திரன் அது இது தீட்டு என சொல்ல ஒன்றுமில்லை இன்றைய சுத்தத்தின் அவசியத்தை அன்றே சொன்னது இந்துமதம்…

குருவானவர் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கின்றார்களே ஏன்?!!

அந்த ஓசை கேட்கும் பொழுதுஎல்லோர் கண்ணும் கர்ப்பகிரகம் நோக்கி திரும்ப வேண்டும், அந்த தெய்வத்தை எல்லோரும் ஒன்றாய் தொழ வேண்டும்….

அரசன் முதல் ஆண்டிவரை அன்று மணியோசை எழுப்பும் பொழுது தள்ளி நின்று வணங்கினார்கள்

மாறாக நீங்களே சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பினால் கூட்டம் என்னாகும்? கருவறை என்னாகும்?

இதெல்லாம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்ட நுட்பமான விஷயங்கள்….

வைர நகையினை ஒருவர் வைத்திருந்தால் அதை பொத்தி பொத்தி பாதுகாப்பாரா இல்லை? எல்லோரும் வந்து பாருங்கள் என எல்லோர் கையிலும் கொடுப்பாரா?…

வைர கண்காட்சியிலே அது பாதுகாப்பாக தள்ளிதான் வைக்கபட்டிருக்கும்

உயர்ந்த மதிப்புமிக்க பொருட்களுக்கான இடம் அப்படியானது, மகா மகா தூய்மையான கற்பகிரகமும் அப்படியே….

ஆழ சிந்தித்தால் அதிலுள்ள உண்மை விளங்கும்…

புனிதமான விஷயங்களில் சாணி அடிக்க வேண்டாம், திருப்பி அடிக்கபடும்….

ஆலயத்தை கட்டிய மன்னனே கர்ப்பகிரகதுக்குள் செல்லமாட்டான் எனும்பொழுது அதை கட்டிய கொத்தனாரும் சிற்பியும் ஏன் போகமுடியவில்லை என சிவகுமார் கேட்பது அறியாமையின் உச்சம்!!!

பிறப்பால் வருவதா கர்ப்பகிரக உரிமை?

அங்கு பிறப்பால் எதுவும் வருவதில்லை தனக்கு பின் மகனும் பேரனும் கர்ப்பகிரகத்தில் வந்து தட்சணை பிச்சை வாங்க வேண்டும் என எந்த பிராமணனும் நினைப்பதில்லை….

மாறாக திராவிட கட்சி தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் தலமை பதவி பிறப்பால் நிர்ணயிக்கபடுகின்றது என் அப்பனுக்கு பின் எனக்கு, எனக்கு பின் என்மகனுக்கு அவனுக்கு பின் என் பேரனுக்கு என பிறப்பால் வரும் உரிமையினை நிலைநாட்டுகின்றார்கள்….

மாட்டார்கள்….

ஆலயங்களும் அவற்றின் அமைப்புகளும் நுட்பமான நிர்வாகம், பக்தி, இயங்குமுறை , பாதுகாப்பு, உடல்நலம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கியவை….

ஒரு காலத்தில் இருந்த மிக பெரும் அறிவான சமூகத்தால் ஏற்படுத்தபட்டவை, அறிவும் ஆழ்ந்த கவனமும் இருந்தால் அது புரியும், புரிந்தால் கை எடுத்து வணங்க தோன்றும்.சில விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம்….

இவர்கள், முதலில் கற்பகிரகம் நுழைய வேண்டும் என்பார்கள், பின் தொட வேண்டும் என்பார்கள் மெல்ல ஆலயத்தில் மீன்குழம்பும் கருவாட்டு பொறியலும் சமைக்க அனுமதிக்க வேண்டும் என்பார்கள், ஒவ்வொன்றாய் சொல்லி ஆலயத்தை மீன் சந்தையாக ஆக்க நினைப்பார்கள்….

அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்ட் இதுதான், அதனால் இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்…..

இவ்வளவு சொல்வார்கள், சரி பூசாரி மகன் பூசாரி என கற்பகிரகத்தில் நுழைவதில்லை ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, பிறப்பால் ஏற்ற தாழ்வு எங்கே உண்டு என கேளுங்கள்….

Comment here