ஆன்மிகம்

கரூரில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா

கரூரில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர் அழைக்கபடுகின்றது.இதை தொடர்ந்து இன்று கருர் சிவனடியார்கள் கூட்டத்தின் 26 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் காலையில் பஞ்சமூர்த்திகள்
நாயன்மார்கள்.மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்ற பின்னர் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.இதை தொடந்து வண்ண விளக்கு அலங்காரத்தில் 63 நாயன்மார்களும் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தனர்.இதில் ஓதுவார்கள் பன்னிரு திருமுறை இன்னிசை பாடல்களை பாடி மேளதாளத்துடன் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comment here