பொது

காக்காய் வலிப்பு

மருந்து –ஓன்று
வசம்பு சூரணம்
வசம்பு ……இருபது கிராம்
சுக்கு …..பத்து கிராம்
மிளகு………. பத்து கிராம்
திப்பிலி …… பத்து கிராம்
கடுக்காய் .. பத்து கிராம்
பெருங்காயம் ………. பத்து கிராம்
உப்பு …………..கால் தேக்கரண்டி
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்
இந்த வசம்பு சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
அளவு தேனில் கலந்து குழைத்து
தினமும் ஒருவேளை
உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்
சாப்பிட்டு வர
படிப்படியாக நோய் கட்டுக்குள் வந்து
இருபத்தி நான்கு நாட்கள்
அதாவது அரை மண்டலத்தில்
முழுமையான குணம் அடையலாம்
குறிப்பு
நாட்டு மருந்துக் கடைகளில் வசம்பு தூள் கிடைக்கிறது
சுக்கு மிளகு திப்பிலி தூள் சம அளவு கலந்து திரிகடுகு சூரணம் என்ற பெயரில் கிடைக்கிறது
கொட்டை நீக்கிய கடுக்காய் தூள் கிடைக்கிறது
அதை வாங்கி வந்து
வசம்பு தூள் —இருபது கிராம்
திரிகடுகு சூரணம் ..முப்பது கிராம்
கடுக்காய் தூள் .. பத்து கிராம்
பெருங்காயம் தூள் ………. பத்து கிராம்
உப்பு …………..கால் தேக்கரண்டி
ஆகியவற்றைக் கலந்து சூரணம் ஆக செய்து வைத்துக் கொள்ளலாம்
மருந்து..இரண்டு
வசம்பு தூள்
வல்லாரைத் தூள்
வெந்தயம் அரைத்த பொடி
கஸ்தூரி மஞ்சள் தூள்
திப்பில் பொடி
ஆகிய ஐந்து பொடிகளையும்
சம அளவு
ஒன்றாகக் கலந்து
சூரணமாக்கி வைத்துக் கொண்டு
இந்த சூரணத்தில்
ஒரு விரற்கடை அளவு எடுத்து
தேனில் குழைத்து
தினம்
காலை
மாலை
இரண்டு வேளையும்
சாப்பிட்டுவர
வலிப்பு நோய்
அதனால் ஏற்படும் காய்ச்சல்
உடல் சூடாகுதல்
தலைவலி
ஆகிய பக்க விளைவுகளும் சரியாகி
நோய் முழுமையாக குணமாகும்
மருந்து மூன்று
மேற்கூறிய மருந்துகளுக்கு துணை உணவாக
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை
கீழ்க்கண்ட பாசிப் பயறு கசாயம் குடித்து வரலாம்
நூறு மில்லி கொதிக்கும் நீரில்
பாசிப் பயறு ( தோலுடன் ) ஒரு தேக்கரண்டி
சோம்பு என்ற பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி
மல்லித் தழை ஐந்து கிராம்
போட்டு
நன்கு கொதிக்க விட்டு
ஐம்பது மில்லியாக சுருங்கிய தீநீராக்கி
இறக்கி
வடிகட்டி
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குடித்து வர
நரம்புத் தளர்ச்சி நீங்கும்
இது கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

Comment here