பொது

காங்ரெஜ் பசு: 

இதுவும் குஜராத் மாநிலத்தை தாயகமாக கொண்டது. மிகவும் வலிமை வாய்ந்தது. உழவுத் தொழிலுக்கும் இப்பசுக்களை பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் கறுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் இப்பசுக்கள் இருக்கும். நெற்றி அகன்று இருக்கும். கொம்புகள் பெரியதாக அகன்று விரிந்து இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும். இதர குறிப்புகள்: இதன் எடை: 360-385 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் – 1440. ஈத்து இடைவெளி: 490 நாட்கள். நாள் ஒன்றுக்கு பால் கறக்கும் திறன்: 10-15 லிட்டர். நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து: 4.8%.

Comment here