அரசியல்

காஞ்சிபுரத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில்  அணிவகுப்பு ஊர்வலம்  நடைபெற்றது.

காஞ்சிபுரத்தின்  ஆர்.எஸ்.எஸ். சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி பண்புப் பயிற்சி முகாம் துவங்கியது. அன்று முதல்  நடைபெற்ற இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல இளைஞர்கள் பங்கேற்றனர். முகாமிற்கு இராமா ஏழுமலை தலைமை வகித்தார்..
முகாமில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்பட்டன.இன்று முகாம் நிறைவை முன்னிட்டு காஞ்சிபுரம் மண்டி தெருவில் இருந்து  ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. கொடிக்கு மரியாதை செய்யப்பட்டு மலர்கள் தூவி தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் துவங்கியது.ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

Comment here