Sliderஆன்மிகம்

காஞ்சிபுரத்தில் பல்வேறு சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமி ஒட்டி அன்னாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

                       தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்றுஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும் இந்த அன்னாபிஷேகம் மனிதர்கள் மற்றும் ஜீவராசிகளுக்கு உணவு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரம் ஏரிகாத்த கைலாசநாதர் திருக்கோவில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதில் வெண்டைக்காய் புடலங்காய் சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறுகாய்கறி மற்றும் வாழைப்பழம் ஆப்பிள் சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை மற்றும் ஆராதனை அபிஷேகங்கள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்களுக்கு தரிசனம் செய்து அன்னதானம் பெற்றுச் சென்றனர்.விழா ஏற்பாடுகளை காமாட்சியம்பாள்ஆலயத்தின் முன்னாள் ஸ்ரீகார்யம் செல்லப்பா சிறப்பாக செய்திருந்தார்.

Comment here