Sliderஆன்மிகம்

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள்

Rate this post
காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள்  ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விஷ்ணு துர்கை அலங்காரத்தில் ரேணுகாம்பாள் எழுந்தருளினார்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆலயத்தில் நடைபெற்ற பரத நாட்டிய விழாவினை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல்வேறு ஆலயங்களில் நவராத்திரி திருவிழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு  பகுதியில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் அம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதையொட்டி அன்னை ரேணுகாம்பாள் விஷ்ணு துர்கை  சிறப்பு அலங்கராத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். அதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வழி பட்டனர். நவராத்திரி திருவிழாவை யொட்டி ஆலய வளாகத்தில் சிறுவர்களின் பாரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் பல்வேறு விதமான பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பாரத நாட்டியம் ஆடியதை  அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். வந்திருந்த அனைவருக்கும் விழா குழுவினர் சார்பில் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
https://youtu.be/fxlnlE4Dreg

Comment here