ஆன்மிகம்

காஞ்சிபுரம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு

Rate this post
திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
மண் ஸ்தலமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற 108 சிவாலயங்கள் உள்ளன. மகா சிவராத்திரியையொட்டி இன்று அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கைலாசநாதர் கோவில்,  ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில், கச்சபேஸ்வரர் திருக்கோவில் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், முக்தீஸ்வரர் திருக்கோவில், சித்தி ஈஸ்வரர் திருக்கோவில்  உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  செய்பப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.
 மேலும் இரவு முழுவதும் மகா சிவராத்திரி விரதத்தை விழித்திருந்து பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து கோவில்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெற்று வண்ணம் இருந்தன. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து மகா சிவராத்திரி விரதத்தை நிறைவேற்றி வந்தனர். சிவாலயங்களில் வழிபாடு நடத்திச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டன

Comment here