மாவட்டம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பட்டமளிப்பு விழா : பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பி துரைசாமி சிறப்புரை

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பட்டமளிப்பு விழா வில் 1400 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களும் பதக்கங்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பி துரைசாமி சிறப்புரையாற்றி வழங்கினார்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டம் பெற்ற 1400 மாணவ மாணவிகளுக்கு இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பி துரைசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி சென்னை பல்கலைக்கழக அளவில் முதலிடம் மற்றும் சிறப்புத் தகுதிகள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆயிரத்து 400 மேற்பட்ட இளநிலை முதுநிலை மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் எம் சிவராஜன் அவர்கள் வரவேற்பு செய்து பல்வேறு துறைகளில் சார்ந்த பேராசிரியர்கள் ஆசிரியர் பணியாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் விழாவில் கலந்து கொண்டு பங்கு கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேசுகையில் மாணவ மாணவர்கள் இந்திய நாட்டின் சிறந்த குடிமகனாக இருக்க வேண்டும் எனவும் பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்

Comment here