ஆன்மிகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் முக்கியமானதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மலையாள நாச்சியார் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் மலையாள நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் எழுந்தருளி ஊர்வலமாக சென்று திருக்கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு  வரதராஜப் பெருமாளுக்கும், மலையாள நாச்சியார் தேவிக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
மலையாள நாச்சியார் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comment here