Uncategorized

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் தை மாத  3நாள்  தெப்போற்சவ  திருவிழா துவக்கம் 

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் தை மாத  3நாள்  தெப்போற்சவ  திருவிழா துவக்கம்
முதல் நாள்  தெப்போற்சவத்தை யொட்டி   பெருந்தேவி தாயாருடன் வரதராஜப் பெருமாள் வண்ண வண்ண மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி 3முறை  வலம்  வந்து   திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு காட்சியளித்து  அருள்பாலித்தார்.
https://youtu.be/-HUX_LfE7Hc
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தை ஒட்டி தை மாத தெப்போற்சவ திருவிழா 3 நாட்கள்  நடைபெறுவது வழக்கம் .மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தெப்போற்சவ  திருவிழாவில் முதல் நாளில் மூன்று சுற்றும் இரண்டாம் நாள் ஐந்து சுற்றும் நிறைவாக மூன்றாம் நாளில் ஏழு சுற்றும் தெப்பலில்  வரதராஜப் பெருமாள் வலம் வந்து
  பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.
 அந்த வகையில் இந்த ஆண்டு தை மாத தெப்போற்சவம் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது .அதையொட்டி தெப்போற்சவம் திருவிழாவின்  முதல் நாளில் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில்  பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் உற்சவர்  எழுந்தருளினார் . பின்னர்  சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  அதையடுத்து முதல் நாள் தெப்போற்சவத்தையொட்டி தெப்பலில்  மூன்று முறை வலம் வந்து திரண்டிருந்த திரளான பக்தர்களுக்கு  காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த தெப்போற்சவத்தை காண  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த  திரளான பக்தர்கள் வரதராஜப்பெருமாளின் பேரருளை பெற்று சென்றனர்.

Comment here