காமன்வெல்த் இன்றுடன் நிறைவு!

Rate this post

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்.,5ல் தொடங்கிய 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. நிறைவு விழாவில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக்கொடி ஏந்தி வழிநடத்த செல்கிறார்.

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில்  நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டனில் சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தங்கம் வென்றார்.  பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 21-18,23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சாய்னாவிடம் தோல்வி அடைந்த சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்தியா வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் சரத் கமல் , இங்கிலாந்து வீரரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

லேசிய வீரர் சாங் வீ லீயிடம் 2-1 என்ற செட்கணக்கில் போராடி வீழந்தார். 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன், தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. இந்திய இதுவரை இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 65 பதக்கங்களை வெற்றுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*