காரிருள் நிலைப்பதில்லை கண்ணே..!

Rate this post

இந்த காரிருள்
நிலைப்பதில்லை கண்ணே..!!
மெழுகின் ஒளியாய்
சில உறவுகள் உனக்காய்
திரி கொண்டு ஒளிதர
காத்திருக்கின்றது அன்பே..!!
கண்ணீர் துடைத்து
விழித்திரை கரைத்து
மனம் கொண்டு
பார்த்திடு பெண்ணே..!!
ஏமாற்றம்
படிப்பினையே
என் அன்பு மனமே..!!
மாயை
விரைவில்
மறைந்துவிடும் உயிரே
மனமும் அதிலே
மறைந்து விட்டால்
மண்ணில் மனிதம்
தழைக்காது உறவே..!!
உலகம்
உனக்கானது செல்லமே..!!
உறவுகள் எல்லாம்
உன்னை அழைத்து
பாசம் கொண்டு முத்தமிட
கை நீட்டி காத்திருக்கின்றது மாணிக்கமே..!!
இழப்புகள்
இனி…
வாழ்க்கையில்
இறுதியானது இனியவளே..!!
இந்த உலகம்
விசித்திரமானது என்னுயிரே..!!
இன்முகம் கொண்டு
எழுந்து வந்திடு செந்தாமரையே..!!
வாழ்க்கை
வாழ நினைபவர்க்கு
மிக அழகிய
வழி ஒன்றை
வடிவமைத்து
வைத்திருக்கின்றது

சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*