கார்த்திக் அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ’மிஸ்டர் சந்திரமெளலி’

5 (100%) 1 vote

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மௌனராகம் படத்தில் இடம் பெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற வசனம் மிகவும் பிரபலம். பல வருடங்களுக்கு பிறகு கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இப்படத்தை திரு இயக்க, கிரியேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரெஜினா கஸ்ஸான்ட்ரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் சதீஷ் காமெடியில் அசத்தவுள்ளார்.

இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.இது குறித்து இயக்குனர் திரு கூறுகையில், இதில் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குனர் மகேந்திரன், கார்த்திக் மற்றும் அகத்தியன் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*