காலா ஆடியோ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்!

Rate this post

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் கூட எதிர்பார்க்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இது ஆடியோ விழா போலவே தெரியவில்லை, படத்தோட வெற்றிவிழா போல் உள்ளது. ஏன் வெற்றிவிழா போல், இது வெற்றிவிழா தான், கடைசியாக நான் கொண்டாடிய வெற்றிவிழா சிவாஜி தான், அந்த விழாவில் கருணாநிதி கலந்துக்கொண்டு பல விஷயங்களை பேசினார். அவரின் குரல் இன்னும் மறக்க முடியாது, கருணாநிதி குரல் விரைவில் கேட்கும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். கூடிய விரைவில் அந்த குரல் மீண்டும் கேட்க வேண்டும், அது தான் என் விருப்பம்.

இமயமலைக்கு நான் போவதே கங்கையை பார்க்க தான் . சில இடங்களில் மானமாகவும் ரெளவுத்ரமாகவும் நடமாடிக்கொண்டும் போகும். தண்ணீர் பிரச்சனை என்றால் என்னை அறியாமல் ஆர்வம் வந்துவிடுகிறது. தென் இந்திய நதிகளை எல்லாம் இணைய வேண்டும். அதுதான் எனது வாழ்வின் ஒரே கனவு. அப்படி நடந்தால் அடுத்த மறுகணமே நான் இறந்தால் கூட கவலை இல்லை.

லிங்கா படத்திலிருந்து நல்லவனாக இருக்க வேண்டும் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது என்ற பாடத்தை கற்று கொண்டேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைபடாமல் எனது வழியில் செல்வேன். 20 வருடங்களுக்கு முன்பே இந்த குதிரை நின்று விடும் என்று கூறினார்கள், ஆனால் இப்போதும் ஓடுகிறது. 40 ஆண்டுகளாக எனது கதை முடிந்துவிடும் என்று கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். நான் ஓட வில்லை, நீங்கள் ஓட வைக்கிறீர்கள் ஆண்டவன் ஓட வைக்கிறான் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

43 வருட சினிமா வாழ்க்கையில் ரஞ்சித் மட்டுமே திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் காலா படத்தில் அரசியல் இருக்கிறது. காலா படம் வெற்றி அடையும் என நம்புகிறேன். நம்ம குடும்பத்தை நாம் பார்க்க வேண்டும். மகிழ்சியான நேர்மறையான சிந்தனைகளை வைத்து கொள்ளுங்கள் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*