தமிழகம்

காவடி விழா

Rate this post

சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு வெகு விமர்சியாக நடைபெற்ற காவடி விழா. அருகண்டன் காவடி ,புஷ்ப காவடி பறக்கும் காவடி உள்ளிட்ட பல காவடிகள் எடுத்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் உள்ள அருளருள் பாலாமணி வேலர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்து பாலமணிவேலரை வழிபடுவது வழக்கம் . அதே போல இந்த 63வது ஆண்டும் வாழும் போல் திருக்கோவிலில் சேவல்மணி கொடியேற்றப்பட்டு . கோவில் வளாகத்தில் அருகண்டன் காவடி ,புஷ்ப காவடிகாவடி உள்ளிட்ட பல காவடி களுக்கு பால் ,தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காவடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் .மேலும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று காவடி எடுத்து முருகனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. காவடி விழாவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காவடிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது மேலும் இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால பாலமணிவேலரை தரிசனம் செய்தனர்.

Comment here