அரசியல்இந்தியாதமிழகம்புதுச்சேரிபொது

காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணி தீவிரம் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Rate this post

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தின் மேகேதாட்டு பகுதியில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்தது. அத்துடன்,
சாம் ராஜ்நகர் மாவட்டம் கொள்ளே காலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் மற்றும் மேகேதாட்டுவில் இரு தடுப்பணைகளை கட்டவும் முயற்சி எடுத்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா இருந்தபோது இதற்கான முயற்சிகள் தீவிரமானது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் இந்த முயற்சி தடுக்கப்பட்டு வந்தது. தற்போது, கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து, மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு தமிழகம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, நேற்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, காவிரியின் குறுக்கே மேகேதாட் டுவில் 5 ஆயிரத்து 912 கோடி மதிப்பில், சமநிலை நீர்த்தேக்கம், குடிநீர் திட்டத்துடன் 400 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கர்நாடக அரசின் ஒரு தலைப்பட்ச மான இந்த நடவடிக்கையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். காவிரியின் குறுக்கே எந்த புதிய திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை நதிநீரை பங்கிடும் இதர மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டு அவற்றின் அனுமதியையும் பெற வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல் களை மீறும் வகையில் கர்நாடாவின் இந்த நடவடிகைகள் அமைந்துள்ளன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தண்ணீர் மொத்தமும் தொடர்புடைய மாநிலங்கள் தேவை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய நீர்த்தேக் கத்தை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பது, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும். இந்த நீர்த்தேக்கம் காவிரியின் இயற்கையான நீர் ஒழுங்கை பாதிக்கும். கூட்டாட்சி அமைப்பின்படி, ஆறு சார்ந்து மேல் பகுதியில் இருக்கும் எந்த ஒரு மாநிலமும் கீழ் பகுதி யில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி, தன்னிச்சையாக மாநிலங்களுக்கு இடையிலான ஒரு ஆற்றின் இயற்கையான ஒழுங்கை தடுக்கக் கூடாது. ஆனால், மேகேதாட்டு திட் டத்தை பொறுத்தவரை, மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், மத்திய நீர்வள ஆணையத்தை நேரடியாக கர்நாடக அரசு நாடியுள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, மேகேதாட்டு சமநிலை நீர்த் தேக்கம் கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

Comment here