காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவுத் திட்ட அம்சங்கள்!

Rate this post

பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போகும்  காவிரி வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையை, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சீலிடப்பட்ட கவரில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மே-16-ம் தேதிக்கு (நாளை மறுநாள்) வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

**காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

**காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

**காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும்.

**காவிரி தொடர்பான அமைப்பில் தலைவர் உட்பட 10 பேர் இடம் பெறுவர்.

**குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம் பெறுவர்.

**காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் நீடிக்க முடியும்.

**உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அனைத்து அதிகாரங்களும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

**தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்துக் கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

**நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் நீர் திறக்கப்படும்.

**நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்.

**நீர் இருப்பு, நீர் வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை குழு கணக்கிட வேண்டும்.

**குழுவின் அடிப்படை பணிகளுக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும்.

**குழுவின் நிர்வாக செலவு உள்ளிட்ட அனைத்து வகையான செலவுகளையும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

**காவிரி தொடர்பான குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*