இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இமாம் சாஹிப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.  இரு தரப்பினருக்கு இடையேயான இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  அவர்களின் அடையாளம் காணப்படவில்லை.

Comment here