இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

Rate this post

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் ஹிந்த் சீதாபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் மீது பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் படையினரும் பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பெருமளவிலான வெடிப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.

Comment here