ஆயுர்வேதம்

கிணற்றடிப்பூண்டு

கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி.

இதன் தாயகம் மத்திய அமரிக்கா.பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான

சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி .ஈரமான இடங்களில் தானே

வளரும் தன்மையுடையது .இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ.தண்டு 5 -10  எம்.எம்.நீளம், பூவின்விட்டம் 1.3  1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5.நடுவில் வெண்மையாகஇருக்கும். இது தன்மகரந்தச் சேர்க்கையால்

விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.

இது சாலை யோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும்  பரவி வளரும். சீதோஸ்ண, மிதசீதோஸ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும்பரவியுள்ளது.

லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

Comment here