கோர்ட்

கிரானைட் வழக்கு: அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம்

கிரானைட் மோசடி குறித்த வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு, கொட்டாம்பட்டி பகுதிகளில் பி.ஆர்பி., பி.டி.எஸ்., ஆனந்த் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, கிரானைட் கற்களை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், போலீசார் மேலூர் கோர்ட்டில் 2480 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், இந்த நிறுவனங்களால் அரசுக்கு ரூ.1398 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Comment here