விளையாட்டு

கிரிக்கெட் : டோனி அவுட் தவறா?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு பயத்தை ஏற்படுத்தி வந்தார். மேலும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது, ஆட்டத்தின் 48.2-வது பந்தை டோனி அடித்து ஆட முற்பட்டார். அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார். ஆனால் கப்திலின் அற்புதமான துரோவால் டோனி ரன் அவுட் ஆனார். இந்தநிலையில் டோனி ரன் அவுட் ஆன வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி விதிமுறைகளின்படி, மூன்றாவது பவர் பிளேவில், 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 வீரர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், நேற்றைய போட்டியில் 6 வீரர்கள் வட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். இதை அம்பயர் கவனிக்கவில்லை. இந்த நிலையிலேயே, டோனியின் ரன் அவுட் நிகழ்ந்துள்ளது. வட்டத்திற்கு வெளியே 6 வீரர்கள் நின்றுக்கொண்டிருக்கும்போது வீசப்படும் பந்து நோ பால் ஆகவே கருதப்படும். அம்பயரும், நோ பால் தரவில்லை.

அம்பயர் நோ பால் சிக்னல் தந்திருந்தால், டோனி 2-வது ரன் எடுக்க ஓடிருக்க மாட்டார். ஏனெனில், அடுத்த பந்து ப்ரீ ஹிட் பந்து தான். அதில் அவுட் கிடையாது என்பதால், டோனி சிக்ஸ் அடித்திருப்பார். இந்தியாவும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும். அம்பயரின் தவறான அணுகுமுறையால், 100 கோடி இந்திய மக்களின் கனவு, ஒரே பந்தில் நிராசையாகிப்போனது.

அது உண்மையாக இருந்து அம்பயர் அதை கவனித்து நோ-பால் வழங்கி இருந்தாலும், ப்ரீ ஹிட்டிலும் ரன் அவுட் உள்ளது. எனவே தோனி அவுட்டாகி இருப்பார் என்றும் டுவிட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் அது கிராபிக்ஸ் தவறு என்றும் ரசிகர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

டோனியின் ரன் அவுட்டின் போது 6 பீல்டர்கள் இருந்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் இந்த உலக கோப்பை போட்டிகளில் அம்பயர்களின் செயல்பாடுகள் கேள்வி குறியாக மாறி உள்ளது.

இந்தியா தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறும் போது :-

“இந்திய ரசிகர்களுக்கு ஒரு செய்தி என்னிடம் உள்ளது உங்கள் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது மற்றும் செயல்திறனுக்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர், அவர்களால் இறுதிப்போட்டியில் நுழைய முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. தயவுசெய்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் … உங்கள் அணியை வெறுக்காதீர்கள், உங்கள் அணியைத் தாக்கி பேச வேண்டாம் என கூறி உள்ளார்.

Comment here