விளையாட்டு

கிரிக்கெட் : பாகிஸ்தான் நிதான ஆட்டம்

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 43-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கினர். இதில் பஹார் ஜமான் 13 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து இணைந்த இமாம் உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 57 ரன்னுடனும், இமாம் உல்-ஹக் 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Comment here