விளையாட்டு

கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்கள் விளாசல்

டவுன்டான்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் இவின் லீவிஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

இந்த ஜோடியில், தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்புடன் ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த இவின் லீவிஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி சிறிது ரன் சேர்த்த நிகோலஸ் பூரன் 25 ரன்னிலும், அதிரடியாக ஆடி அரைசதத்தை பதிவு செய்த ஹெட்மயர் 50 ரன்களிலும், ஆந்த்ரே ரஸ்செல் ரன் எதுவும் எடுக்காமலும், அதிரடி காட்டி ஓரளவு ரன் சேர்த்த ஜாசன் ஹோல்டர் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை ஆடி அரைசதத்தை பதிவு செய்த ஷாய் ஹோப் 96 ரன்களில் கேட்ச் ஆனார். டேரன் பிராவோ ஆட்டத்தின் கடைசி பந்தில் 19 ரன்னில் போல்ட் ஆனார்.

கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை எடுத்துள்ளது.

வங்காளதேச அணியில் முஸ்தாபிஜூர் ரகுமான் மற்றும் முகமது சைபுதீன் தலா 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல்–ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்க உள்ளது.

Comment here