இயல்தமிழ்

கிருஷ்ணனால் மிக விரும்பப்படுவராக இருக்கும் கன்னியர்களே !

Rate this post

“வையத்து வாழ்வீர்காள் !” என்று 2 ஆம் பாசுரத்தில் அழைக்கிறாள் ,கோதை..
ஞானத்திற்கு குறைவு ஏற்படுத்தும் இப்பூவுலகிலும் , கிருஷ்ணானபவத்திற்கு குறைவில்லாததால் , வையத்து வாழ்வீர்காள் என்கிறாள். நெருப்பு சட்டியிலே பூ முளைத்தாற்போல் , வழிப்பறி நிறைந்த இடத்தில் முடிசூடி ஆபரணங்கள் அணிந்தது போல , இவ்வுலகில் வாழப்பெறும் பாக்கியவதிகளே ! என்கிறாள்.
ஆண்களாக பிறக்காமலும் அதிலும் குறிப்பாக இளம் வயது பெண்ணாக , கிருஷ்ணனால் மிக விரும்பப்படுவராக இருக்கும் கன்னியர்களே !என்கிறாள். நாமும் நம் நோன்பிற்காக , மழை வேண்டி , இருந்த இடத்திலே இருக்காமல் கண்ணனை நோக்கி , அதிகாலையிலே நீராடி ,செல்கிறோம்.பாற்கடலிலே இவ்வுலகத்தாருக்கு ஷேமத்தையே நினைத்து யோகநித்திரை செய்யும் பரந்தாமனனின் போக்யமான திருவடிகளையே பாடுகிறோம்.நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிறாள்.இடைப்பெண் பாஷையில் , பால் குடிக்க மாட்டோம் என்னாமல் , உண்ணமாட்டோம் என்கிறாள் கோதை.அவன் இட்டால் கண்ணுக்கு மையும் , தலைக்கு பூவும் சூடிக்கொள்வோம்.நாமாக செய்து கொள்ள மாட்டோம்.
பெரியவர்களை மீறி எதுவும் செய்ய மாட்டோம்.பிறரைத் தேடிச் சென்று மற்றவரைப் பற்றி தீயச் சொற்களைச் சொல்ல மாட்டோம். பொருள் வேண்டுபவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தும் , பிரம்மச்சாரிகளுக்கும் சன்னியாசி களுக்கும் வேண்டுவனற்றைக் கொடுத்தும் (கிருஷ்ணன் வேண்டுபவருக்கு அவனையும் , அவனடியாருக்கு தொண்டை வேண்டுபவருக்கு அதனையும் அடைய , கை காட்டி) கிருஷ்ணார்ப்பனம் என்று அவனும் அவன் செல்வங்களும் பல்கி பெருக வாழ்த்தி வாழப்பெறுவோம் ! வாருங்கள் தோழிகளே ! என்கிறாள் , ஆண்டாள்.

Comment here