பொது

கிர் பசு: 

இதன் பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் ஆகும். இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும். சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும். சாந்த குணம் கொண்டது. சிறியவர் கூட பால் கறக்கலாம். இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும். காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.
இதர குறிப்புகள்: எடை : 310-335 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் – 1550. ஈத்து இடைவெளி – 520 நாட்கள். நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர், நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%

Comment here