இந்தியா

குஜராத்தில் பெண் சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் பரிதாப பலி!

Rate this post

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வாவ்டி கிராமத்தில் இன்று மாலை 15 வயது சிறுவன் ஒரு பெண் சிங்கத்தால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் மெஸ்வானியா என்ற 15 வயது சிறுவன், கிராமத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத சாலையின் வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தான்

15 வயது சிறுவன் பரிதாப பலி

அப்போது, அவ்வழியே சீறிப் பாய்ந்த பெண் சிங்கம் ஒன்று அச்சிறுவனை தாக்கியது. இத்தாக்குதலில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தற்போது அந்த பெண் சிங்கத்தை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆசிய சிங்கங்களின் ஒரே வசிப்பிடமான குஜராத்தில், 2015 இல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கையானது 2020 இல் 674 ஆக 29 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment here