தமிழகம்

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

Rate this post

சென்னை : நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் கொடி ஏற்றினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றியபோது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முதல்வர் பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் உள்ளனர். இதனை தொடர்ந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலாலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குடியரசு தின விழா விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். குடியரசு தின விழாவையொட்டி மெரினா கடற்கரை முழுவதும பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Comment here