இயல்தமிழ்தமிழகம்தொழில்மாவட்டம்

குடும்ப அட்டை, கல்விக் கடன் பெறுவதற்கு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வெள்ள நிவாரணம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர்

colle

கடலூர் நாள்:19.09.2016

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.த.பொ.ராஜேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.த.பொ.ராஜேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.09.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, கல்விக் கடன் பெறுவதற்கு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வெள்ள நிவாரணம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனுக்களை பெற்றார்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பொதுமக்கள் இங்கு வந்து மனுக்களை அளிக்கிறார்கள். அம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். பொதுமக்களை அலையவைக்கக்கூடாது. முதியோர் உதவித்தொகை குறித்த மனுக்கள் மீது விதிகளுக்குட்பட்டும் நேரில் சென்று ஆய்வு செய்தும் அவர்களுக்கு தீர்வினை 10 நாட்களுக்குள் விரைந்து வழங்க வேண்டும். புதிய குடும்ப அட்டை வேண்டிய விண்ணப்பங்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதிலினை தெரியபடுத்தவேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி பற்றாக்குறை ஏதுமிருந்தால் அத்தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வாறுவது குறித்த மனுக்கள் மீது வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து வெள்ளநீர் ஊருக்குள் வராத அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர்களின் குறைகளை தீர்க்க நாம் பாடுபடவேண்டும். இதற்கு அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும்.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதுதான் அரசு அலுவலர்களின் கடமையாகும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதை திறன்படுத்தவும,; அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தவும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஆய்வு செய்து விதிமுறைகளுக்குட்பட்டு 15 நாட்களுக்குள் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் அரசு அலுவலர்களுக்கு முதல்பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என மூன்று சுழற் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளில் வழங்கப்படும். எனவே, அரசு அலுவலர்கள் பொதுமக்கள்அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 416 மனுக்கள் வரப்பெற்றன. வரப்பெற்ற மனுக்களில் குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலை வேண்டி, முதியோர் ஓய்வூதியம் கோரி மனுக்கள் அதிகமாக வந்தன. ஏனயவை பிறதுறை மனுக்கள். பொதுமக்கள் அளித்த இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருவாய்த்துறை சார்பாக ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ.1000ஃ- க்கான ஆணையை சிதம்பரம் வட்டத்தை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும் இந்த வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மூலம் வைக்கப்பட்டிருந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு அரங்கிற்கு சென்று அங்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கோ.விஜயா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் திரு.தங்கவேல், உதவி ஆணையர் கலால் திரு. முத்துகுமாரசாமி உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comment here