ஆயுர்வேதம்

குடும்ப தலைவிகளுக்கான வீட்டுகுறிப்புகள்

Rate this post
 1. கம்பளி உடைகளில் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.

 2. கறுத்து மங்கலாகியப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால் பளீர் என்று ஆகும்.

 3. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை, அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

 4. வாழைப் பூவை நறுக்கிய பின் வினிகர் கரைத்த நீரில் கை கழுவினால், கறை நீங்கி விடும்.

 5. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை, வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம். ஆம்லெட் மேல் உப்பு, மிளகுத்
  தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால், சுவையால இருக்கும்.

 6. பாயசம் நீர்த்துப் போனால், அதில் வாழைப் பழத்தை பிசந்து போட்டு, சிறிது தேனும் கலந்துவிட்டால் சுவையான பாயசம்
  தயார்.

 7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ, எறும்பு அண்டாது.

 8. முகம்பார்க்கும் கண்ணாடி பளபளவென்று இருக்க ஒரு வெள்ளை தாளில் உள்ள தண்ணீர் வடிந்தவுடன் அதனை கொண்டு கண்ணாடியை துடைத்தால் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

Comment here