குப்பைமேனி செடியின் மருத்துவ குணங்கள்

5 (100%) 8 votes

உலகில் எத்தனை வகை மருத்துவமுறைகள் இருந்தாலும் தமிழ் வைத்திய முறை அதிக செலவில்லாதது. பக்கவிளைவுகள் இல்லாதது, உடலுக்கு தீங்கு விளைவிக்காதது. எளிதில்  கிடைக்ககூடியது இந்திய குக்கிராமம் முதல் நகரம் வரை எங்கும் சாலை ஓரங்களில் தினமும் நாம் பார்க்கும் செடி குப்பைமேனி. இதன் ஆங்கில பெயர் (acalypha indica) குப்பைமேனி செடிகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்டுகின்றது. குப்பைமேனிக்கு பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.குப்பைமேனியை உணவு முறையாக சாப்பிட்டுவந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, சோர்வு, போன்றவை நீங்கும். குப்பைமேனியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்,  நச்சுக்கடி இவைகளுக்கு பற்றுபோடலாம், தீக்கயங்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும். குப்பைமேனியை ஆமணக்கு என்னை விடு வதக்கி ஒரு மண்டலம் கர்ப்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வு பிடிப்பு நீங்கும்,சரும நோய்கள் அகலும், சுவாச கோளாறுகள் சரியாகும். குடல் புழுக்கள் வெளியேறும்,மூல நோயின் தாக்கம் குறையும் குப்பைமேனி இல்லை சாற்றை சுண்ணாம்புடன் சேர்த்து குழைத்து பூசினால்படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி,முதலியவை குணமாகும். சளி,ஆஸ்துமா போன்ற நோய்கள் சரியாகும். தலைமுடி கொட்டாமல் இருக்க குப்பைமேனியுடன் நல்லண்ணை இட்டு செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் வைத்திருந்து பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும்,  ஆண்கள்  புதன், சனிக்கிழமைகளிலும் தலைக்கு தேய்த்து குளித்துவர முடிஉதிர்தல் படிபடியாக குறையும். இது பற்றி ஆயுர்வேத மருத்துவர்  சிவரஞ்சினி கூறுவதை கேட்போம்……..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*