குறைவான சீரகம் நிறைவான பலன்

Rate this post

உணவு பழக்க வழக்கத்தில் குறைவான சீரகம் பயன்படுத்தினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைவான பயன் கிடைக்கும். அதாவது, தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும், சீரகம் செல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும். அத்துடன், சீரகம், ஏலம் இதனை மேலோட்ட வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் கால் ஸ்பூன் அளவு சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*