உலகம்

குலுங்க வைத்த எரிமலை

கௌதமாலா என அழைக்கப்படும் தென் அமெரிக்க நாடு. இங்கே இதுநாள் வரை சமர்த்தாகத் தூங்கிக் கிடந்த ஃபியூகோ எரிமலை கடந்த 3ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை திடீரென கண்விழித்து களேபரம் செய்யத் தொடங்கியது.

எரிமலையின் தூசி,  33 ஆயிரம் அடி உயரத்துக்கு வானில் துப்பப்பட்டது. ஏறத்தாழ இப்படி 16 கிலோ மீட்டர் உயரத்துக்கு எரிமலை தூசி இப்படி எறியப்பட்டதைப் பார்க்கவில்லை என்று எரிமலை வல்லுநர்களே திகைத்துப் போய் உள்ளனர்.

ஃபியூகோ எரிமலை சீற்றத்தால் எல் ரோடியோ என்ற ஒரு கிராமம் வரைபடத்தில் இருந்து மறைந்து போய்விட்டது. எரிமலைசீற்றத்தால், இதுவரை 192 பேரை காணவில்லை. 75 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து லாவா கறுப்புமழை போல சுற்றுப் புறம் முழுக்க பெய்து வருகிறது. 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு குமுறாது என்பதுதான் இப்போதைக்கு ஆறுதல்.

Comment here