குழந்தை நலம்

குழந்தை ஏன் அழுகிறது?

குழந்தைக்கு பசிக்காகத்தான் பெரும்பாலான நேரங்களில் அழும். ஏனென்றால் குழந்தைகளின் குடல் மிகச் சிரியதாக இருப்பதோடு பால் வெகு சீக்கிரத்தில் ஜீரணித்து விடும். குழந்தைகள் பசிகாக அழும் நேரங்களை குறித்து கொள்ளுங்கள். தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பசிக்கும் நேரம் வந்தவுடன் தயாராக இருங்கள். புட்டி பால் கொடுப்பவர்கள் குழந்தை அழும் முன்னமே பாலை தயார் செய்து விடுங்கள். குழந்தை அழ ஆரம்பித்து சில நிமிடங்களில் பாலை கொடுத்து விடுங்கள். அப்படி பாலை தாயார் படுத்த நேரம் எடுத்தால், அப்பாவோ அல்லது அம்மாவோ தங்களில் பெருவிலை சுத்தம் செய்து குழந்தையின் வாயில் வையுங்கள். குழந்தை கை விரலை சப்பத் தொடங்கிவிடும். சில விநாடிகளுக்கு குழந்தையின் அழுகையை நிறுத்தலாம்.

உங்கள் குழந்தையின் நப்கினை முடிந்தளவிற்கு அடிக்கடி மாற்றுங்கள். குழந்தைக்கு ‘டயபர்’ அணிவித்தால் ஒரு நாள் முழுவதும் இரு டயபர்கள் மட்டுமே மாற்றாதீர்கள். இது குழந்தைக்கு அசௌகரியத்தையும் தோல் தொடர்பான வியாதிகளையும் கொடுக்கும். முடிந்தளவு குழந்தைகள் கழிவுகளாஇ வெளியாக்கிய உடனே நப்கினையோ டயபர்களையோ மாற்றிவிடுங்கள். இது உங்கள் குழந்தையை தூய்மையாக வைப்பதோடு தேவயில்லாத அழுகையை நிறுத்தும்.

உங்கள் குழந்தைக்கு தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள். ஆடைகள் அழகாக இருக்கின்றது என்று அவர்களுக்கு ஒத்து வராத ஆடைகளை அணியாதீர்கள். உங்கள் குழந்தைகள் சௌகரியமாக இருந்தாலே அழவேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

குழந்தைகளின் மொழி அழுகையும், சிரிப்புதான். குழந்தைகள் அழ ஆரம்பித்தால், பசி, அசௌகரியம் போக வலியும் ஒரு காரணம். சில குழந்தைகள் கொசு கடித்தாலே வலி தாங்காமல் அழும். முடிந்தளவு குழந்தைகளை கொசு வலையில் படுக்க வையுங்கள். இரவு நேரங்களில் கதவு, மற்றும் ஜன்னல்களை மூடியே வையுங்கள். குழந்தையை கொசு கடித்தால் தானே அழும்.

Comment here