இந்தியா

கெம்ப்டி அருவி

உத்தராக்கண்ட் மாநிலத்தில், பிரபல குளிர் மலையான முசோரி நகருக்கு அருகில் இருக்கிறது கெம்ப்டி நீர்வீழ்ச்சி. வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமான இந்த அருவி, நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. அருவியிலிருந்து வழிந்தோடும் வெள்ளிநீர், ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு மாயாஜாலம் காட்டத்தக்க அபூர்வ அழகு கொண்டது. மலையியிருந்து 40அடி உயரத்தில் விழும் இந்நீர்வீழ்ச்சியே முசோரியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். யமுனாத்ரி சாலையியிருந்து 15 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பல பாறைகளைக் கடந்து இந்நீர்வீழ்ச்சி சமநிலைப் பகுதிகளை அடைகிறது. இங்கிருந்து 12 கிமீ தொலைவில், அக்லார் நதியைக் கடந்து யமுனை நதியை அடையலாம். மீன் பிடித்தல், நீச்சல் போன்ற பொழுதுபோக்குகள் இங்கு புகழ்பெற்று விளங்குகின்றன.

Comment here