சம்பவம்

கேரளாவில் நிகழ்வது இயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா

 

தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழையினா ல் ஒட்டுமொத்த கேரளா மாநிலமே பாதிக்கபட்டு
ள்ளது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து
விட்டது.சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக் கான ரோடுகள் அழிந்து விட்டது.8000 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில
அரசு அறிவித்துள்ளது.

ஆச்சரியமாக பம்பை நதியில் ஓடும் வெள்ளத்தி னால் சபரிமலைக்கே யாரும் வர வேண்டாம்
என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்த
மாதம் தான் உச்சநீதி மன்றத்தில் சபரிமலைக்கு
அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்
என்று மாநில அரசு வாதாடிய நிலையில் இப்பொழு து யாருமே கோயிலுக்கு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.இது இயற்கையின் சீற்றமா இல்லை
இறைவனின் தண்டனையா என்று கேட்டால் இரண்டும் ஒன்று தான் என்றே நான் கூறுவேன்.

ஏனென்றால் இயற்கையே இறைவனின் படைப்பு
தானே..

நம்முடைய பாரத நாடு ஒரு புண்ணிய பூமி.இங்கு ஏராளமான புராணங்களும்அதை சுற்றும் பல நம்பி க்கைகளும் இங்கு உள்ளது.. நம்முடைய நாட்டில் விஞ்ஞானத்திற்கும் மேற்பட்ட நிறைய நிகழ்வுகள் நடைபெறுகிறது.அதில் ஒன்று தான் இப்போதைய கேரள பெரு வெள்ளம்.

சமீபத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயிலில்
இளம் பெண்கள் நுழைந்தால் என்ன தவறு? என்கிற
வாதங்க ளை மாநில அரசாங்கமே உச்சநீதி மன்றத் தில் எடுத்து வைத்து வந்தது.இதன் தீர்ப்பு வெளி வர
இருக்கும் நிலையில் கேரளாவை சுழற்றி அடிக்கும்
மழையும் சூழ்ந்து நிற்கும் வெள்ளமும் இதற்கெல் லாம் ஐயப்பன் தான் காரணம் என்று கேரளா மக்களை கூற வைத்துள்ளது.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அடையாளம் உண்டு. நம் முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த ஆகம விதிகள் உண்டு.இதில் அரசர்களே தலையிட்டது கிடையாது.ஆனால் கேரளாவை ஆளும் கடவுள் எதிர்ப்பு இடது சாரி கூட்டம் சபரிமலை கோயிலில் பெண்களை வயது வித்தியாசம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

இதனால் தான் இப்பொழுது கேரளா வரலாற்றில் இல்லாத மழை பெய்து பெரு வெள்ளம் உண்டாகி கேரளாவே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.சென்னை யில் கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த வெள்ளத்தை விட 5 மடங்கு வெள்ளத்தை கேரளா மாநிலம் சந்தித்து வருகிறது.இது கடவுளின் தண் டனை என்று கடவுள் தேசத்தின் மக்கள் இப்பொழுது
கண்ணீருடன் கதறி வருகிறார்கள்.

கிட்ட தட்ட இப்போதைய கேரளாவின் நிலைமை
2013 ல் உத்தர்காண்டு மாநிலம் சந்தித்த கன மழை
யையும் அதனால் உண்டான பெரு வெள்ளத்தையும்
உதாரணம் காட்டி கேரளா மீடியாக்கள் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதனால் தான் நானும்
கேரளாவின் வெள்ளத்தையும் உத்தரகாண்டு வெள்ள த்தையும் ஒற்றுமை படுத்தி கடவுள் நம்பிக்கையோ டு இதை எழுதுகிறேன்..

முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பிப்போம்..

இந்த உலகில் நீர் தோன்றி நிலம் உருவாகி உயிரி னங்கள் உருவாகி மனிதகுலம் பிறந்து நாகரிகங்கள் வளர்ந்து தர்மமும் அதர்மமும் மனித வாழ்வில் பிறப்பில் இருந்து இறப்பின் வரை உடன் வருபவை என்று உலகிற்கு உணர்த்த இந்து தர்மம் சொல்லும் கடவுளின் அவதாரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பூமி கேரள மாநிலம்.

எப்பொழுதுஎல்லாம் அதர்மம் ஆட்டம் போடுகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவன் மனிதஅவதாரமெடு த்து தர்மத்தை நிலை நாட்டுவான் என்கிற கூற்றுபடி பெருமாளின்ஐந்தாவது அவதாரம் என இந்து தர்மம் போதிக்கும் வாமன அவதாரம் நிகழ்ந்த பூமி

கேரளா மாநிலம் விஸ்ணுவின் ஆறாவது அவதார மான பரசுராம ரால் உருவாக்கபட்டது.என்று புராண ங்கள் சொல்கி ன்றது.சத்ரியர்களை கொன்ற தோஷ த்தை போக்க இன்னொரு பூமியை உருவாக்கி பிரா மணர்க ளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய கோடாரியால் கடலை பிளந்து உரு வாக்கிய பூமிதான் மலையாள பூமி..

பரசுராமரால் உருவாக்கப்பட்ட பூமி என்பதாலே இன் றும் கேரளாவை கடவுளின் தேசம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.அது மட்டு மல்லாது .இன்று ம் கேரளாவை பரசுராம சேத்திரம் என்றும் சொல்கி றார்கள். இப்படி ப் பட்ட பெருமை கொண்ட து கேரளா.

கடலின் நீர் உப்புத்தன்மை வாய்ந்தது என்று இந்த அறிவியல் உலகம் எப்பொழுது உணர்ந்தது என்று நமக்கு தெரியாது. ஆனால் பரசுராமர் உருவாக்கிய இந்த கேரளா கடலில் இருந்து வந்ததால் நீரில் இரு ந்த உப்பு தன்மையை போக்க காலகோடா என்கிற விஷத்தை பாம்புகளிடம் இருந்து கக்க வைத்து நிலத்தின் உப்புத்தன்மையை மாற்றி கேரளாவை இயற்கை பூத்துக்குலுங்கும் சோலையாக பரசுராமர்
உருவாக்கினார் என்று இந்து புராணங்கள் கேரளா வின் வரலாற்றை கூறுகின்றன.

இதற்கு அடையாளமாக கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபட் என்கிற இடத்தில் உள்ள மானரசலா நாகராஜர் கோயிலில் தான் பரசுராமர் நாகராஜாவை வணங்கி மலையாள மண்ணின் உப்புத்தன்மையை போக்க நாகங்களின் உதவிக் கேட்டு தவமிருந்தார் என்று கேரளா மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

இப்படி கடவுள் நம்பிக்கை உடைய கேரள மக்கள்
இப்பொழுது கேரளாவை அழிக்கும் கனமழையை
இயற்கையின் சீற்றம் என்று கூறாது இறைவனின்
தண்டனை என்றே கூறுகிறார்கள்.இப்படித்தான்
உத்தரகாண்டு மக்களும் 2013 ல் நடைபெற்ற பெரு
வெள்ளத்தை தாரீ தேவியின் தண்டனை என்றே
கூறினார்கள்.

மேக வெடிப்பினால் மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தான் உத்தரகாண்டில் பெரு வெள் ளம் வந்தது என்று விஞ்ஞானம் சொல்லிக் கொண்டு இரு க்க உத்தர காண்டில் கேதர்நாத்துக்கு நேர் எதி ரில் இருக்கும் ஸ்ரீநகரில் வாழும் மக்களோ இத னை தாரீ தேவியின் கோபம் தான் என்று இன்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இதாங்க ஆச்சரியம்

காஸ்மீரை போலவே உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரு ஸ்ரீநகர் உள்ளது அலக்நந்தா நதிக்கரையில் இந்த நகரம் உள்ளது. இங்கு தான் அன்னைதாரி தேவி கோயில் இருந்தது.உத்தர்கான்டின் காவல் தெய்வம் தாரீதேவி யாகும்.சார்தாம் யாத்ரா என்று சொல்லப் படும் கேதார் நாத் பத்ரிநாத் கங்கோத்ரி யமுனோத்ரி யாத்திரை தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு காவலாய் நின்று காப்பவள் தாரீ தேவியாகும்

கங்கைநதியின் துணை நதிகளில் மந்தாகினி நதி அமைதியின் ஸ்வரூபம். பெண்மையின் அம்சம். இங்கு தான் கேதார்நாத் கோயில் உள்ளது.ஆனால் அலக்நந்தா நதி வீறு கொண்டு எழுந்த ஜல்லிக்கட்டு காளையை போல ஆண்மையின் ஒரு அம்சமாக பிரவாகமாக ஓடி வரும்.இங்கு தான் தாரீ தேவி கோயில் உள்ளது.

இந்த அலக்நந்தா நதியின் சீற்றத்தை அடக்கி ஆள் பவள் தான் அன்னை தாரீ தேவியாகும்.அவளது அரு ளால் தான் அலக்நந்தா கட்டுப்பாட்டில் இருக்கிற தென்றும் அலக்நந்தா அமைதியாக அடக்கமாக ஓடிக்கொண் டிருக்கிறது என்பதும் இங்குள்ள மக்க ளிடையே இன்றளவும் உலவும் நம்பிக்கையாகும். நம்பிக்கை தானே வாழ்க்கை.

இந்த நிலையில் தான் அலக்நந்தா நதியில் அணை கட்டி நீர்மின்சாரம் தயாரிக்க முடிவு செய்து அதற்கா ன ஏற்பாட்டில் இறங்கியது முந்தைய காங்கிரஸ் அரசாங்கம். அணை கட்டுவதற்கு இடைஞ்சலாக உள்ள தாரீ தேவி கோயிலை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்து அதற்காக வேறு ஒரு இடத்திலும் கோயில் கட்டபட் டது.

2013 ம் ஆண்டில் ஜூன் 16, மாலை 6 மணிக்கு மேல் அன்னை தாரீ தேவியின் கோயில் இடிக்கப்ப்பட்டது. கோயிலில் குடி கொண்டிந்த தேவியின் சிலையும் அறுக்கபட்டு புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு இர வோடு இரவாக இடம் மாற்றப்பட்டது.

இது நடந்த இரண்டு மணி நேரத்தில் கேதாரநாத்தில் பலத்த இடியுடன் மழை பெய்ய துவங்குகிறது அதைத் தொடர்ந்து அலக்நந்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ‘ உத்தரகாண்ட் மாநிலமே அழிந்து போனதை நாம் அறிவாம்.

சற்றே யோசித்து பாருங்கள் எத்தனையோ மழை காலங்களில் பெருகாத காட்டாற்று வெள்ளம் இந்த கோயி ல் இடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும் வெள் ள ம் வந்து பேரழிவு ஏற்படுத்தியதை நினைத் தால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..

இது தன்னுடைய கோயிலை இடித்ததால் தாரீதே வி க்கு உண்டான கோபம் என்று அப்பகுதி மக்கள் சொல் வதி லும் நியாயம் இருக்கிறதல்லவா..எதுவாக இரு ந்தாலும் நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் வடிவில் உள்ளது என்பதை ஏற்று கொண்டேஆக வேண்டும்.

இதனால்தான் மீண்டும் கூறுகிறேன்..நம்முடைய பாரத நாடு ஒரு புண்ணிய பூமி.இங்கு ஏராளமான புராணங்களும் அதை சுற்றும் பல நம்பிக்கைகளு ம் உள்ளது..அதனால் சபரிமலை கோயிலுக்கு யார் வர வேண்டும் யார் வரக்கூடாது என்று தீர்மா னிக்க வேண்டியது கோயில் நிர்வாக மே .

Comment here