தமிழகம்

கொரானா எனும் கொடிய நோயை கண்டு உலக நாடுகள்

செங்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மலைவாழ் கிராம மக்களுக்கு கொரானா நிவாரணம்

செங்கம் – 09
கொரானா எனும் கொடிய நோயை கண்டு உலக நாடுகள் அஞ்சி கொண்டிருக்கும் வேளையில் கொரோனா நோயை கட்டுப்படுத்திட உலக நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மருந்து கண்டு பிடிக்கும் வரை வீட்டிலேயே பொதுமக்கள் இருந்திடவும் மேலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்திரவு பிறப்பித்தும் அந்தந்த மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த ஊரடங்கு உத்திரவால் பெரிதும் பாதிக்கப்படுவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள் தான். சுமார் 40 நாட்களுக்கு மேலாகியும் ஊரடங்கு நீடிப்பதால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு உதவிட சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதே போன்று செங்கம் அடுத்த முறையாறு பகுதியில் இயங்கி வரும் வாம் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ராஜவேல் தனது தொண்டு நிறுவனத்தின் சார்பில் சாப்பாட்டிறக்கே மிகவும் கஷ்டப்பட்டு நீப்பத்துரை மற்றும் ஆனந்தவாடி யை சேர்ந்த மலைவாழ் மக்களை கண்டுபிடித்து சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட காய்கறி தொகுப்பினை வழங்கினார். இவர் 144 தடை போட பட்ட நாட்களில் இருந்தே தன்னால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். தனது நிறுவனத்திலேயே பொது மக்களுக்கு தேவைப்படும் முக கவசங்களை தயாரித்து அரசு மருத்துவமனை, காவல் நிலையம் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நிவாரண பொருட்களை பெற்று கொண்ட மலைவாழ் மக்கள் வாம் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ராஜவேலுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்

Comment here