தமிழகம்

கொரோனா அலட்சியப் போக்கு.

 

பொதுவாகவே மனிதர்களிடம் அதுவும் தமிழ்நாட்டில் ஒரு பொதுப் புத்தி வழக்கம் உண்டு. அது, எது நல்லதோ அதை அலட்சியம் செய்வது, புறக்கணிப்பது, பின்பற்றாமல் இருப்பது.

கொரோனா வைரஸ் கோவிட் 19 ன் தாக்கும் விதம் பற்றி ஓரிரு நாளிலேயே உடனடியாகக் கணித்தவர்கள் தமிழ்நாட்டின் சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவம் அறிந்தவர்கள் மட்டுமே.

இதற்கு அடிப்படைக் காரணம், நோய் நாடி நோய் முதல் நாடி என்னும் சித்த மருத்துவ வல்லுநரான திருவள்ளுவப் பெருமானும், சித்தர் பெருமக்களும் அளித்துள்ள எளிய அளவு கோல்.

வளி, அழல், ஐயம் (வாதம், பித்தம், கபம்)

என்பதே.

இந்த மூன்றைத்தான் வள்ளுவர்,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

இந்த மூன்றும் மனித உடலில் அதிகரித்தாலோ, குறைந்தாலோ நோய் ஏற்படும் என்கிறார்.

64 வகைக்காய்ச்சல் 4448 நோய்கள் பற்றியத் தெளிவும், அதற்குத் தீர்வும் கண்டு வைத்தவர்கள் சித்தர் பெருமனார்கள்.

அந்த வகையில் சீனாவில் புறப்பட்டு இத்தாலியில் தாக்கிய போதே இறந்தவர்கள் பெரும்பாலும் முதியவர்கள், மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாது நீரிழிவு போன் பிற குறைபாடுகளையும் கொண்டிருந்தவர்கள்.

இது, நமது சித்த பெருமக்கள் வகைப்படுத்திய இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல்தான் என்று உடனே கூறினர் நமது மருத்துவர்கள்.

ஆடாதோடா, கபசுரம், மகா சுதர்சன மாத்திரை. ஆர்சனிக் அல்பம் மாத்திரை, ஆகியவை நல்ல பலன் கொடுக்கும் என்றார்கள். எப்படி எத்தனை நாள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவித்தனர்.

இவற்றை முறையாகப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை..

5400 பேருக்கு ஒரு உயிர்ச் சேதாரமும் இல்லாது காப்பாற்றினார் சித்த மருத்துவர் வீரபாகு.

கசப்பாக இருக்கிறது…. ஆங்கில மருத்துவ உலத்துனாலயே முடியல.. நாட்டு வைத்தியர்கள் என்ன செய்துவிட முடியும் என்றவர்களும், வாழ்வியல் முறையை அலட்சிப் போக்கோடு அணுகியவர்களுமே பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையாவது மூன்று நாட்கள் கபசுரம் அருந்துவது. அன்றாடம் ரசம் சேர்ப்பது, இஞ்சி, சுக்கு, மிளகுப் பயன்பாடு, தினமும் கல் உப்பு + மஞ்சள் பொடியை நீரில் கலந்து வாய் கொப்பளிப்பது ஆகியற்றை விடாது செய்வதை விட்டுவிடக்கூடாது.

இதை செய்ய இயலாதவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் கபசுரக் குடி நீரை அருந்தலாம்.

வாழ்க வளமுடன்.

– வளர்மெய்யறிவான்

Comment here