Uncategorizedபொது

கொல்கத்தாவில் ஒரு கூட்டம் கூடி கலைந்து இருக்கிறது

கொல்கத்தாவில் ஒரு கூட்டம் கூடி கலைந்து இருக்கிறது 

  1. இதில் யாராவது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று பேசி இருக்கிறார்களா?
  1. இந்தியாவின் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரித்து அந்நிய செலவாணியை இந்தியாவில் அதிகரிப்போம் என்று பேசி இருக்கிறார்களா?

  2. இந்தியாவில் நதிகள் இணைக்கப்படும் என்று பேசி இருக்கிறார்களா?

  3. இந்தியாவில் கல்வி சுகாதாரம் மற்றும் மருத்துவத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதை பேசியிருக்கிறார்களா.?

  4. காஷ்மீர் பிரச்னை தீர்க்கப் பட நடவடிக்கை எடுக்கப் படும் என்று யாராவது பேசி இருக்கிறார்களா?

  5. அயல்நாட்டு சதியால் இந்தியாவில் மதம் மாற்றம் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது மிகப் பெரிய ஆபத்தானது என்று யாராவது பேசி இருக்கிறார்களா?

  6. இந்திய இப்பொழுது அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது.

மேலும்,அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப் படும் என்று யாராவது பேசி இருக்கிறார்களா?

  1. இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் பாதுகாக்கப் படும் என்று யாராவது பேசி இருக்கிறார்களா?

  2. இந்தியாவின் கடல் பகுதிகளில் எந்த காரணத்தாலும் அந்நியர்கள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று பேசி இருக்கிறார்களா?

  3. எல்லா நாட்டோடும் இந்திய ரூபாயில்தான் வர்த்தகம் செய்வோம் என்று யாராவது பேசி இருக்கிறார்களா?

இப்படி பல பிரச்சனைகளுக்கு இந்தியாவில் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது.

இவற்றை எதையுமே இவர்கள் பேசவில்லை.
அப்படி என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னதான் செய்யப் போகிறார்கள் இந்தியாவில் ?

இவர்கள் பேசியது ஒன்றே ஒன்றுதான் மோடி எதிர்ப்பு. இதை சொல்ல இத்தனைப் பேரை மம்தா கூப்பிட வேண்டுமா?

இது ஒரு கையால் ஆகாத ஊழல் கூட்டம். இவர்கள் எந்த கொள்கையும் இல்லாதவர்கள்.

இந்திய மக்களே இவர்களை புரிந்துக் கொள்ளுங்கள்.

 

Comment here