ஆயுர்வேதம்மருத்துவம்

கோடைவெயிலுக்கு குளுமையான கற்றாழை

3.5 (70%) 2 votes

கோடைவெயிலுக்கு குளுமையான கற்றாழை

பார்பதற்க்கு அழகாக தோறும் கற்றாழை முள் நிறைந்திருந்தாலும் அதிக மருத்துவ குணம் உடையது. குறிப்பாக இந்த கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிக்க கூடியதாகவும், உடல் எடையை குறைக்ககூடியதகவும் முக அழகை கூட்டும், வயிற்றுபுண்களை ஆற்றும் வல்லமைகொண்டது. கை கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல்,தோல் நோய்கள் குணமாகவும், கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் தீரவும், ஆசனவாய் சார்ந்த நோய்களை தடுக்க உதவும்,கண் எரிச்சலை போக்கும். இது போன்று மேலும் பல நோய்களை தடுப்பதிலும் சிலநோய்களுக்கு தீர்வாகவும் உள்ள கற்றாழை எளிதாக எங்கும் காணப்படும் தாவரமாகும் சிறிதளவு தண்ணீர் இருந்தாலே வளரக்கூடிய மூலிகையாகும். இதை ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து இதன்பயன்களை பெறலாம். மலைகற்றாழை, ரயில்வே கற்றாழை, வரிக் கற்றாழை, செங்கற்றாழை, சோற்று கற்றாழை என பல வகையான கற்றழைகள் இருந்தாலும் சோற்று கற்றாழை மட்டுமே அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. கற்றாழை தண்டின் தோலை சீவி அதன் உள்ளிருக்கும் சதை பகுதியை சிறுதுண்டுகளாக நறுக்கி  மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு காணமல் போகும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.ஆண்மை பலத்தை கூட்டும், இளமையை அளிக்கவல்ல அற்புத மருந்தாகவும் கற்றாழை விளங்குகிறது.பெண்கள் அதிகம் பயன் படுத்தும் முகபூச்சிகளில் கற்றாழை இல்லாமல் தயாரிக்கமுடியாது.சூரியஒளியின் தாக்கம் அதிகம் இருந்தால்கற்றாழை கூழை பூசிக்கொள்ளலாம், வறண்ட சருமம் உள்ளவர்களும் கற்றழையை உடலில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி பெறுவதுடன் தேகம் புத்துணர்ச்சி  பெறும். கற்றழையை தினமும் பயன்படுத்தினால் கோடையின் வெப்பத்திலிருந்தும் பல்வேறு நோய்களிலிருந்தும்  நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.   

 

Comment here