தமிழகம்

கோவையில் நீட் தேர்வு: மாணவருக்கு உதவிய போலீஸ்காரர்

Rate this post

கோவை,

கோவையில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நீட் தேர்வை எழுத ஏராளமான மாணவ-மாணவிகள் வந்தனர். அதில் ஒரு மாணவர் புகைப்படம் கொண்டு வராததால் தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். அவரிடம் புகைப்படம் எடுக்க பணமும் இல்லை. அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவை மாநகர போலீஸ்காரர் சரவணகுமார், விசாரித்தபோது, அவசரத்தில் தான் புகைப்படத்தை எடுத்து வரவில்லை என்றும், தற்போது தன்னிடம் பணமும் இல்லை என்றும் கூறினார்.

இதைக்கேட்டதும், போலீஸ்காரர் சரவணகுமார் தன்னிடம் இருந்து ரூ.40-ஐ எடுத்து அந்த மாணவரிடம் கொடுத்து உடனடியாக புகைப்படம் எடுத்து வருமாறு என்று கூறினார். இதையடுத்து அந்த மாணவர் விரைந்து சென்று அருகில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்துவிட்டு சரியான நேரத்துக்குள் அங்கு வந்தார். பின்னர் அவர் மையத்துக்கு தேர்வு எழுத சென்றார். போலீஸ்காரர் சரவணகுமாரின் இந்த செயலை அங்கு நின்றிருந்தவர்கள் பாராட்டினார்கள்.

இதேபோல் இன்னொரு மாணவர் ஆதார் அட்டையை எடுத்து வரவில்லை. சரவணன் என்ற ஆட்டோ டிரைவர், அந்த மாணவரை தனது ஆட்டோவில் ஏற்றி, அவரின் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஆதார் அட்டையை எடுத்து விட்டு, மீண்டும் தேர்வு மையத்துக்கு கொண்டு வந்து விட்டார். அவரையும் அங்கு நின்றிருந்தவர்கள் பாராட்டினார்கள்.

Comment here