அரசியல்சினிமா

சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Rate this post

 நாட்டின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 2-வது இடமும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3-வது இடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 4-வது இடத்திலும் உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64-வது இடம் கிடைத்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 65-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த் 78-வது இடத்தைப் பிடித்துள்ளார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ள ரஜினிகாந்த்திற்தகு சினிமாவைத் தாண்டியும் செல்வாக்கு இருப்பதை இந்தப் பட்டியல் காட்டுவதாக அந்த நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

Comment here