சசிகலா நாளை சிறைக்கு திரும்ப ஆயத்தம்!

5 (100%) 1 vote

:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோலில் வந்த சசிகலா நாளை காலை மீண்டும் பெங்களூர் சிறைக்கு திரும்புகிறார்.

அணமியில்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடராஜனை பார்ப்பதற்காக 15 நாள் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்தார். இதை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் 5நாள் பரோல் அளித்து கடந்த 6-ந் தேதி உத்தரவிட்டது.

அன்று பிற்பகல் பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்ட சசிகலா சென்னை வந்து சேர்ந்தார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, பேட்டி அளிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு இடையே அவர் தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து கணவரை தினமும் பார்த்து வந்தார்.

5 நாள் பரோல் கடந்த 7-ந் தேதி தொடங்கி இன்று 11-ந் தேதியுடன் முடிவடைந்து விடுகிறது. நாளை 12-ந் தேதி பகல் 12 மணியளவில் அவர் மீண்டும் சிறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. அதன்படி நாளை காலை அவர் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூர் சிறைக்கு புறப்படுகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தபோது அமைச்சர்கள் சிலரும் எம்எல்ஏக்கள் சிலரும் கிருஷ்ணபிரியாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அதை அவர் சசிகலாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*